பேருந்து ஓட்டும் போதே ஓட்டுநருக்கு மாரடைப்பு | நடத்துநரின் அதிவேக செயலால் தடுக்கப்பட்ட பெரும் விபத்து! 

பெங்களூருவில் பிஎம்டிசி பேருந்து ஓட்டுநர் வாகனத்தை ஓட்டியபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள நெலமங்கலவில் இருந்து தசனபுரா நோக்கி பேருந்து காலை 11 மணிக்கு சென்று கொண்டிருந்தது.…

பெங்களூருவில் பிஎம்டிசி பேருந்து ஓட்டுநர் வாகனத்தை ஓட்டியபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள நெலமங்கலவில் இருந்து தசனபுரா நோக்கி பேருந்து காலை 11 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கிரண் குமார் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த நிலையில் பேருந்தை ஓட்டி கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் உயிரிழந்தார்.

அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுமாறுகிறது. உடனே நடத்தினர் ஒபெலேஷ் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.