வரிசையில் நின்று அழகாக செல்லும் செல்லப்பிராணி: வைரல் வீடியோ!

அழகாக வரிசையில் நிற்கும் நாய்கள் உரிமையாளர் அழைத்தவுடன் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது செல்லப்பிராணிகளை வளர்க்கும் பழக்கம் பொதுமக்களிடம்  அதிகமாகிவிட்டது. குறிப்பாக நாய்களை வளர்க்க அதிகம்…

அழகாக வரிசையில் நிற்கும் நாய்கள் உரிமையாளர் அழைத்தவுடன் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தற்போது செல்லப்பிராணிகளை வளர்க்கும் பழக்கம் பொதுமக்களிடம்  அதிகமாகிவிட்டது. குறிப்பாக நாய்களை வளர்க்க அதிகம் பேர் ஆர்வம் காட்டி  வருகின்றனர். வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நாய் இருந்தால் நேரம் போவது  தெரியாது. மேலும் சில நாய்கள் உரிமையாளர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர்களின் அன்பை பெறும்.

இந்நிலையத்தில் இணையவாசி ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. அந்த வீடியோ ஆரம்பித்தவுடன் வரிசையாக 5 நாய்கள் நிற்கின்றன. முதலில் நிற்கும் நாயின் பெயர் கவின். அறையில் உள்ளே உள்ள உரிமையாளர், ஒவ்வொரு நாயின் பெயரை அழைக்கிறார். அழைக்கும் அந்த நாய் மட்டும் உள்ளே செல்கிறது. தன் பின்னால் இருக்கும் மற்ற நாய்களுக்கு முதலில் நிற்கும் காவின் என்ற நாய் அழகாக வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறது.

இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ அதிக லைக்குகளை பெற்று வருகிறது. செல்லப்பிராணியின் செயலுக்கு ஏராளமானோர் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாங்கள் ரேசன் கடை உள்ளிட்ட இடங்களில் வரிசையில் நிற்பதற்கு பதில் கூட்டமாக முண்டியத்து கொண்டு நெரிசலில் சிக்கி தவிக்கிறோம். ஆனால் இந்த செல்லப்பிராணிகள் எவ்வளவு அழகாக வரிசையில் நின்று செல்கின்றன என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.