திமுக சார்பில் மேடவாக்கம் தொடக்கப் பள்ளியில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி!

திமுக சார்பில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் மேடவாக்கம் தொடக்கப் பள்ளிக்கு பென்ச் மற்றும் டேபிள் வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுகவினர் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் மேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 9 லட்சம் மதிப்பீட்டில் பென்ச் மற்றும் டேபிள் வழங்கும் விழா கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பென்ச் மற்றும் டேபிள்களை வழங்கினர். அத்துடன் மாணவர்களுக்கு பழச்சாறு, மோர், இளநீர் வழங்கக்கூடிய குளிர்ந்த குடிநீர் மையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

 

சென்னை தெற்கு மாவட்டம், தலைமை பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் ஒன்றியக் கழகச் செயலாளர் மேடவாக்கம் ப.ரவி தலைமையிலும் புனித தோமையார்மலை தெற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மேடவாக்கம் ஆர்.எஸ்.லோகேஷ்வராவின் ஏற்பாட்டிலும் நடத்த இவ்விழாவில் ஏராளமாக திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.