தேர்தல் தேதி அறிவிக்கப்போவதை அறிந்துகொண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தாம்பரம் அருகே கரசங்கால் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை தமிழக அரசால் செயல்படுத்த முடியாது என்றும், திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என உறுதி அளித்த மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒரே சாதனை அதிகமாக கடன் வாங்கியது மட்டும்தான் என சாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடந்து, திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கத்தில் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், சென்னையின் அனைத்துத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றிட வேண்டும் என்ற அவர், ஒரே ஒரு தொகுதியைக் கூட விட்டுவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தாங்கள் தெரிவித்ததாகவும், இதை அடுத்தே மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்ததாகவும் குறிப்பிட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதை அறிந்துகொண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்தியதாகவும் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.