37.7 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இயக்குனர் மிஷ்கின்!

டெவில் படத்தில் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இயக்குனர் மிஷ்கின்.

டெவில் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் சவரக்கத்தி இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் டெவில். இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழின் மிக முக்கியமான இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக டெவில் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மிஷ்கின் இதற்கு முன் பல பாடல்கள் எழுதியுள்ளார். பல பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானது. தற்போது டெவில் திரைப்படத்திற்கு முத்தான நான்கு பாடல்கள் கொடுத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading