இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘#Devara’ வசூல்!

தேவரா’ படத்தின் வசூல் இரண்டாவது நாளில் பெரியளவில் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமாக உருவாகியுள்ளது ‘தேவரா’. இந்த படத்தின் இசையமைப்பாளராக…

தேவரா’ படத்தின் வசூல் இரண்டாவது நாளில் பெரியளவில் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமாக உருவாகியுள்ளது ‘தேவரா’. இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேவரா படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் வசூலில் பட்டையக் கிளப்பியுள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 172 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால் இரண்டாவது நாளில் இந்த வசூல் பெரியளவில் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு படத்தின் மீது எழுந்த எதிரமறை விமர்சனங்கள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. முதல் நாளை விட இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட 35 சதவீதம் அளவுக்கு இந்த வசூல் சரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.