வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிய இருந்த நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்,

“வருமான வரிக் கணக்கு தாக்கல் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப்.15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் படிவங்கள் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இந்த கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதனால் அனைவரும் துல்லியமாக எளிதாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.