சிலிண்டர் தட்டுப்பாடு – நாடு முழுவதும் அமலுக்கு வந்தது எஸ்மா சட்டம்!

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க நாடு முழுவதும் எஸ்மா சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னரிமை அளித்தும், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க நாடு முழுவதும் எஸ்மா சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டதை அடுத்து பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் எஸ்மா சட்டம் அமலானது.

எஸ்மா சட்டம் அமலானதையடுத்து மாநிலங்களுக்கு இடையிலான எரிபொருள் போக்குவரத்தை மத்திய அரசே நேரடியாக கண்காணிக்கும். மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருட்களின் அதிகபட்ச விலையை அரசே நிர்ணயிக்க எஸ்மா சட்டம் வழிவகுக்கும். எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் பொருட்களை பதுக்கினால் எஸ்மா சட்டத்தின்படி அபராதம், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.