சைபர் கிரைம் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும் என முன்னாள் டிஜிபி ரவி வலியுறுத்தியுள்ளார்.
தாம்பரம் மாநகர காவல்துறையின் முன்னாள் காவல் ஆணையர் ரவி பெயரில் சமூக ஊடகங்கள் மூலமாக மோசடி நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து, அவர், சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது பெயரில் முகநூலில் போலி கணக்கை உருவாக்கி ஒருகும்பல் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனக்கூறினார்.
தேசிய அளவில் அதிரடியான நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே சைபர் கிரைம் மோசடிகளை தடுக்க முடியும் எனக்கூறிய அவர், பள்ளி பாடத்திட்டதிலும் சைபர் கிரைம் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு பாடங்களை கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.







