கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பிறந்த நாள் – போஸ்டர் வெளியிட்ட ஆர்சிபி!

இந்திய மகளிர் அணி வீராங்களையான ஸ்மிருதி மந்தனாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்சிபி நிர்வாகம் போஸ்டரை வெளியிட்டுள்ளது.  ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்குவார். இவர் மும்பையைச் சேர்ந்தவர்.  இடது…

இந்திய மகளிர் அணி வீராங்களையான ஸ்மிருதி மந்தனாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்சிபி நிர்வாகம் போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்குவார். இவர் மும்பையைச் சேர்ந்தவர்.  இடது கை பேட்டரான இவர் இந்தியாவுக்கான டெஸ்ட்டில் 629 ரன்களும் 85 ஒருநாள் போட்டிகளில் 3,585 ரன்களும் டி20களில் 3,320 ரன்களும் எடுத்துள்ளார்.  ஆர்சிபி மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா தலைமை தாங்கிய நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணி நடப்பாண்டு கோப்பையை வென்றது.

ஸ்மிருதி மந்தனா இன்று தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்சிபி நிர்வாகம் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் இளவரசி மாதிரியான தோற்றத்தில் ஸ்மிருதி மந்தனா இருக்கிறார்.  இந்தப் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்மிருதி, சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் தன் சகோதரனுடன் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார்.  அப்போது இவரது சகோதரர் 15 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடி வந்தார்.  தனது சகோதரரின் வழியைப் பின்பற்றி, தனது சொந்த ஆர்வத்தைத் தொழிலாகக் கொள்ள முடிவு செய்த ஸ்மிருதி மந்தனா, தொழில்ரீதியாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார், மேலும் 11 வயதில், ஸ்மிருதி மந்தனா 19 வயதுக்குட்பட்ட அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.