காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு – மதுரை ஜல்லிக்கட்டில் சோகம்!

மதுரை கீழக்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடு முட்டியதில் முதுகலைப் பட்டதாரியான  மகேஷ் பாண்டி (25) உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை  மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இன்று(மார்ச்.16) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதில் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த முதுகலைப் பட்டதாரியான  மகேஷ் பாண்டி (25) மாட்டை
பிடித்த போது, அவரது இடது நெஞ்சில் மாடு குத்தி படுகாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பலனின்றி உயிரிழ்ந்தார். பட்டதாரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினர்
மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.