அயலக தமிழர் நலவாரியத்தின் கலந்தாய்வு கூட்டம் – #KarthikeyaSivaSenathipathi தலைமையில் ஆலோசனை!

கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் அயலகத் தமிழர் நல வாரியத்தின் செயல்பாடுகள் பற்றி ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் கலிபோர்னியா மாநிலம் ஃபே ஏரியா தமிழ்…

கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் அயலகத் தமிழர் நல வாரியத்தின் செயல்பாடுகள் பற்றி ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் கலிபோர்னியா மாநிலம் ஃபே ஏரியா தமிழ் சங்கம் மற்றும் அயலகத் தமிழர் நல வாரியத்தின் செயல்பாடுகள் பற்றி ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் கேள்வி பதில்கள் நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. 250 க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் அயலக தமிழகர்களின் பல்வேறு பிரச்சனைகளை பற்றியும் தமிழ்நாடு அரசு செய்து வரும் அயலக தமிழர்களுக்கான நல வாரியப் பணிகளைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.


மேலும் இக்கூட்டத்தில் அயலக தமிழர்களின் தேவைகளை பற்றியு நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, வாரிய உறுப்பினர் கால்டுவெல் வேள்நம்பி, புகழ் காந்தி ஆகியோர் எடுத்துரைத்தனர். ஏரியா தமிழ் சங்கத்தின் தலைவர் ஜூலியட் ஆறுமுகம் வரவேற்புரையும் நிகழ்த்த செயலாளர் ஜோசப் அவர்கள் நன்றியு வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.