39 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள் -பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஷால் பேட்டி!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள்  என  நடிகர் விஷால் தெரிவித்தார்.

நடிகர் விஷாலின் 46வது பிறந்தநாளையொட்டி சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள
மெர்சி ஹோம் முதியோர் கருணை இல்லத்தில் நடிகர் விஷால் முதியோர்களுக்கு உணவு
வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடினார். முதியோர் இல்லம் வந்த நடிகர் விஷாலை வரவேற்ற கன்னியாஸ்திரிகள் நிலையில் உனவறையில் காப்பகத்தில் இருந்த உறவினர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் பின்னர் செய்தியாளர் சந்தித்த நடிகர் விஷால், ”முதியோர் இல்லத்தில்
பிறந்தநாள் கொண்டாடுவது கடவுளிடம் நேரில் வாழ்த்து பெறுகிற போல் உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு குறித்து மக்கள்தான் கூற
வேண்டும்.உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிக்க வருவது குறித்து எந்த கருத்தும்
கூறவிரும்பவில்லை என்றார்.

மேலும், “சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட பட்டம், 45 வருடத்துக்கு
முன் கொடுக்கப்பட்ட பட்டம். 45 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக உள்ளார். இந்த
வயதிலும் அவர் நடிப்பது எங்களைப் போன்ற நடிகர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர்
ஓய்வெடுக்கலாம் ஆனால் மக்களை எண்டெர்டெயின் செய்ய வேண்டும் என நினைப்பதுதான் சூப்பர் ஸ்டாருக்கான அர்த்தம்.

நடிகர் சங்க தேர்தல் கோரிக்கைகளில் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றிவிட்டோம்.
கடைசி கோரிக்கையான நடிகர் சங்க கட்டடத்தை கட்டிமுடிப்பதுதான் எங்கள் நோக்கம்.
அதற்காகதான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக மக்களுக்கு
முக்கியத்துவமான பெருமையான கட்டடமாக, கலாச்சார மையாமாக இருக்க வேண்டும்
என்பதால்தான் தாமதமாகிறது. எம்ஜிஆர், கலைஞர் சமாதி போன்று மக்கள் பார்க்க
வரவேண்டும் என நினைக்கிறோம். நடிகர் சங்க விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு
வரப்படும்.

தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எந்த விருதுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை
கிடையாது. 4 பேர் அமர்ந்து ஒருவருக்கு அளிக்கலாம், வேண்டாம் என
தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு விருது அளிப்பது ரசிகர்கள்தான்.
ஒரு குழு சார்ந்த ஆலோசனைதான் தேசிய விருதுகளின் பட்டியல்.

அரசியல் என்பது துறையோ, தொழிலோ இல்லை அது சமூகசேவை. மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி மக்களுக்கு தேவையான சேவையை செய்ய வேண்டும் அதுதான் அராசியல்.படப்பிடிப்புக்கு செல்லும்போது அடிப்படை வசதிகள் கூட
இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது.

முதலில் விஜய் அரசியலுக்கு வரட்டும். விஜய் எனக்கு மிகவும் பிடித்த
நடிகர்.அவரை நீண்டகாலமாக எனக்கு தெரியும். அவருக்கு ஆரம்பகாலத்தில் கிடைத்த
விமர்சனங்களை கடந்து வெற்றி பெற்ற தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும். எனக்கு
தெரிந்த ஒரே விஜய் இளைய தளபதி விஜய்தான். அவரது ரசிகன் நான் என பெருமையாக
சொல்வேன். ஒரு வேளை விஜய்க்கு அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள்.

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் விஜய்யின் மகனுக்கு ஜேசம் சஞ்சய்
வாழ்த்துகள்.நானும் 25 வருடமாக இயக்குநராக வேண்டும் என நினைத்து வருகிறேன்.
நானும் இயக்குநராக வேண்டும் என என்னை ஜேசன் சஞ்சய் ஊக்கப்படுத்தி உள்ளார் எனத்
தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading