”உழைப்பாளர்களை வாழவைப்பது திமுக அரசு”

மே தின பூங்காவில் உள்ள நினைவுச்சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தி உரையாற்றினார். மே 1ஆம் தேதி உலகளாவிய தொழிலாளர்கள் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையோட்டி இன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில்…

மே தின பூங்காவில் உள்ள நினைவுச்சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.

மே 1ஆம் தேதி உலகளாவிய தொழிலாளர்கள் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையோட்டி இன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அமைந்துள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவுச்சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்நிகழ்விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவப்பு நிற சட்டையை அணிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தொழிலாளார் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மே 1 நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையை தொடங்கினார். அப்போது பேசிய அவர், அண்ணா மற்றும் கலைஞர் ஆட்சி நடத்திய சூழலிலும் ஏழைகள் மற்றும் தொழிலார்கள் சிரிக்கும் ஆட்சியாகவே இருந்தது. தற்பொழுதும் இருந்து வருகிறது என தெரிவித்தார்.

விவசாய தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க ஆட்சி அமைத்தது, மனிதனை மனிதனே வைத்து இழுக்கும் கை ரிக்க்ஷாவை நீக்கியது, பெற்றோர் இழந்து இருக்கும் பிள்ளைகளுக்கு ஆசிரமம் அமைத்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது, அனைவருக்கும் மருத்துவ காப்பீடு, அமைப்பு சார சங்கம் என்று பல திட்டத்தை அமைத்தது கலைஞர் தான், திமுக அரசு தான் என அவர் தெரிவித்தார். மேலும், அவருடைய பாதையில் தான் அவரது மகனாக இருக்கும் ஸ்டாலின் செய்து வருகிறேன் எனவும் அவர் கூறினார்.

90 ஆண்டுகளுக்கு முன்பே அனைவரையும் தோழர் என்று கூற வேண்டும் என்று சொன்னவர் பெரியார் தான் எனவும் பெரியார் மற்றும கலைஞர் வழியில் தொழிலளார்களை போற்றுவோம் என கூறி தனது மே தின வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.