சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; 99.91% தேர்ச்சியுடன் முதலிடத்தில் திருவனந்தபுரம்…

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுவில் திருவனந்தபுரம் மண்டலம் 99.91 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 15ம்…

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுவில் திருவனந்தபுரம் மண்டலம் 99.91 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப்பட்டன.  இந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbse.nic.in , www.cbseresults.nic.in , www.cbseresults.gov.gov.in மற்றும் www.cbse.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்தனர்.

மாணவர்களிடையே தேவையற்ற போட்டியை தவிர்க்க  இந்த ஆண்டு நடைபெற்ற +2 பொதுத்தேர்வில், யார் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் என்பதை சிபிஎஸ்இ அறிவிக்கவில்லை. நடப்பாண்டு தேர்ச்சி சதவீதம் 87.33% என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை (92.71 %) ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது தெரிகிறது.

அதன்படி, திருவனந்தபுரம் மண்டலம் 99.91 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. தேர்வெழுதிய மொத்த மாணவிகளில் 90.68% பேரும், மாணவர்களில் 84.67% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். ஆண்களை விட 6.01% பெண்கள் அதிக தேர்ச்சி விகிதத்துடன் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.