பணிந்தது கொல்கத்தா…. 23 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நட் ரைடர்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.  ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நட் ரைடர்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக், 55 பந்துகளில் சதமடித்து அசத்தினார். கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படியுங்கள் : M.S.தோனியை சந்தித்த நடிகை குஷ்பு; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ரானா 75 ரன்கள் அடித்தார். இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.