பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன பிளே ஆஃப்…

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிப் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது.  ஆட்டத்தின் இறுதியில்,  13.2 ஓவர்களில் இலக்கை கடந்து,  164 ரன்களை விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் முதல் அணியாக  நுழைந்தது.

இந்தப் போட்டியை கொல்கத்தா அணி உரிமையாளரான ஷாருக் கான் நேரடியாகக் கண்டுகளித்து, தன் அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.  இந்த நிலையில் ஷாருக்கானுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து  அவர் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரின் தீவிர ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.