ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக 154 பேர் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது படகு ஏமன் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த போது கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 68 அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 74 பேர் கடலில் மாயமாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புபடையினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே மாயமான 74 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவது குறிப்பிடத்தக்கது.







