கவின் நடிக்கும் #BloddyBegger திரைப்படத்தின் “நான் யார்?” பாடல் வெளியானது!

நெல்சன் இயக்கத்தில் கவின் நடிக்கும் பிளடி பெக்கர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நான் யார்? பாடல் வெளியானது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட்,…

#BloddyBegger starring Gavin in "Who Am I?" The song is released!

நெல்சன் இயக்கத்தில் கவின் நடிக்கும் பிளடி பெக்கர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நான் யார்? பாடல் வெளியானது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கினார். சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்தார். இவரின் முதல் திரைப்படத்தில் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார்.

இதையும் படியுங்கள் : #Brother பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த ஜெயம் ரவி, பிரியங்கா மோகன்! படக்குழு அறிவிப்பு!

இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், ‘பிளடி பெக்கர்’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘பிளடி பெக்கர்’ படத்தின் முதல் பாடலான நானே யார் பாடல் வெளியானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.