2022-2023 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 25 இலட்சம் பனை விதைகள் விதைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது பேசிய அவர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், உபகரணங்கள் ஆகியவை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும், அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும், இது தவிர, 100 பெண்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்க ஊக்குவிக்கப்படுவார்கள் எனவும், இந்தத் திட்டம் இரண்டு கோடியே 65 இலட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: 50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி – 10 உழவர் சந்தைகளை அமைக்க 10 கோடி
மேலும், பனை சாகுபடியை ஊக்குவிக்க இந்த ஆண்டு 10 லட்சம் பனைவிதைகள் வழங்கப்படும் எனவும் 2022-23 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 25 இலட்சம் பனை விதைகள் நடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும் எனவும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








