ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா தங்கப்பதக்கதை கைப்பற்றியது,
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதிபோட்டி ஹாங்சோ நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர். ஸ்மிருதி மந்தனா 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். ஆனால் அடுத்த வந்த வீராங்கனைகள் நிலைத்து நின்று விளையாடவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின்ல இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. .பிரபோதினி, சுகந்திகா குமாரி, ரனவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. ஆனால் இந்திய அணி வீராங்கனைகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீராங்கனைகள் தடுமாறினர்.
இதனால் 20 ஓவர்களின்ல 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 97 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது. ராஜேஷ்வரி கெய்க்வாட் 2, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ரக்கர், தேவிகா வைத்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.