இணையதளத்தில் வைரலாகும் அரிகொம்பன் – தவறான வீடியோவை பகிர்ந்தாரா ஐ.ஏ.எஸ் அதிகாரி?

சின்ன பிள்ளைபோல் புல்வெளியில் உறங்கும் அரிகொம்பன் என ஐ.ஏ.எஸ். அதிகாரி பகிர்ந்த தவறான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த வாரம் அதகளம் செய்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கடும்…

சின்ன பிள்ளைபோல் புல்வெளியில் உறங்கும் அரிகொம்பன் என ஐ.ஏ.எஸ். அதிகாரி பகிர்ந்த தவறான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த வாரம் அதகளம் செய்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்பாக அகத்தியர் மலை கோதையாறு பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிகொம்பன் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கேரள ஊடகங்கள் அரிகொம்பன் யானை புல்வெளியில் அயர்ந்து தூங்குவதாக வீடியோ வெளியிட்டன. அதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வன விலங்குகள் மீது ஆர்வம் மிகுந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகுவும் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அதீத மயக்க மருந்து காரணமாக அரிகொம்பன் இப்படி உறங்குகிறது என்கிற விவாதமும் எழுந்து வரும் நிலையில்,அந்த வீடியோ, 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி வன விலங்கு புகைப்பட கலைஞர் சுபாஷ் எடுத்தது என்பது தெரியவந்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.