ஆறாம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

தவெக-வில் ஆறாம் கட்டமாக 19 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். அந்தவகையில், தவெக சார்பில் தமிழ்நாட்டில் தொகுதிகளின் அடிப்படையில் 120 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இதுவரை ஐந்து கட்டமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று(மார்ச்.13)  6 ஆம் கட்ட மாவட்டப் பொறுப்பாளர்களை தவெக தலைவர் விஜய் நியமித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தில் ஆறாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய… Click Here dropbox.com/scl/fo/w3uvc48…

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.