செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு விசாரிக்கிறது.
செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில்பாலாஜி மீதான கைது நடவடிக்கை சட்டப்பூர்வமானது எனக்கூறி, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தீர்ப்பளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில்,செந்தில்பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா