SETC பேருந்துகளில் இனி 90 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்படும் என TNSTC தகவல் தெரிவித்த நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்படும் என TNSTC தகவல் தெரிவித்த நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில், பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத் திட்டமிடலுக்கு ஏதுவாக, தற்போது முன்பதிவு நடைமுறையில் மாற்றம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதனை 90 நாட்கள் என உயர்த்தி 18 நவம்பர், 2024 மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது.

பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு http://www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.