ஆனந்த் அம்பானியின் துணை மாப்பிளைக்குகளுக்கு 2 கோடியில் வாட்ச் பரிசு!

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் கலந்துகொண்ட துணை மாப்பிளைகளுக்கு  2 கோடியில் வாட்ச் பரிசளிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்…

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் கலந்துகொண்ட துணை மாப்பிளைகளுக்கு  2 கோடியில் வாட்ச் பரிசளிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது.இவர்களுடைய திருமணம் நேற்றுமுன் தினம் நடைபெற்றாலும் கடந்த ஒரு மாத காலமாக இவர்களுடைய திருமண நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக உலகையே வியந்து பார்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர்.திருமண கொண்டாட்டங்கள் நேற்றுமுன் தினம் தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. இந்தத் திருமண நிகழ்வுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் துணை மாப்பிளைகளுக்கு சுமார் 2 கோடியில் வாட்ச் பரிசளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாகஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்டதுணை மாப்பிளைகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான வாட்ச் அனந்த் அம்பானி பரிசளித்துள்ளார்.
ஆனந்த் அம்பானி பரிசளித்த வாட்ச் 41 மிமீ 18கிராம் இளஞ்சிவப்பு தங்க கேஸ், 9.5 மிமீ தடிமன், நீலக்கல் பொருந்திய படிக பின்புறம் கொண்டுள்ளது. இது கிராண்டே டேபிஸ்ஸரி பேட்டர்ன் (Grande Tapisserie Pattern) வகையில் ப்ளூ கவுண்டர்கள், பிங்க் கோல்ட் ஹவர் மார்க்கர்கள் மற்றும் ராயல் ஓக் கைகள் கொண்ட இளஞ்சிவப்பு தங்க நிற டயலைக் கொண்டுள்ளது.
இது வாரக் குறிப்பீடு, நாள், தேதி, வானியல் நிலவு, மாதம், லீப் ஆண்டு மற்றும் மணிநேரங்கள் மற்றும் நிமிடங்களைக் காட்டுகிறது.  இது 40 மணிநேர பவர் ரிசர்வ் வழங்குகிறது மற்றும் 18K இளஞ்சிவப்பு தங்கத்துடன் AP மடிப்பு கொக்கி மற்றும் கூடுதல் நீல பட்டையும்,  கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.