ஜவான் திரைப்படம் ஐந்து நாட்களில், உலகம் முழுவதும் 574 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், அதன் ஓடிடி வெளியீடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இரண்டு நாட்களில் ரூ.240.47 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.தற்போது 5வது நாள் வசூல் விவரத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 5நாள்களில் ரூ. 574.89 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஷாருக்கான் ஒரு வருடத்தில் தொடர்ந்து இரண்டு ₹500 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார். ஏனெனில் ஷாருக்கான் கடைசியாக நடித்த பதான் திரைப்படமும் வசூலில் சாதனை புரிந்திருந்தது.
தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டு வரும் ஜவான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக முன்னறே அறிவிக்கப்பட்டிருந்தது. ரூ.250 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை கைப்பற்றி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.