தவெகவில் இணையும் அதிமுகவின் நிர்மல்குமார்?

அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக உள்ள நிர்மல்குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவராக இருந்தவர் சிடிஆர் நிர்மல்குமார். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாஜக-வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.  அவருக்கு அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக உள்ள நிர்மல்குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நிர்மல் குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் அதிமுக குறித்த பதிவுகளை நீக்கி உள்ளார். எடப்பாடியார் FOR EVER என வைக்கப்பட்டிருந்த கவர் போட்டோவையும் நிர்மல் குமார் நீக்கியுள்ளார்.

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு நிர்மல் குமார் வருகை தந்துள்ளார். இன்று மாலை அவர் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைய உள்ளதாக அடுத்தடுத்து தகவல் வெளியாகி வருகிறது.

தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த #Vijay! - News7 Tamil

அவருக்கு கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவும் தற்போது பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். இதனால், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவரும் இன்று கட்சியில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.