அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

விருதுநகரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில், ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது.   விருதுநகரில் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்  மாவட்டத் தலைவர்…

விருதுநகரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில், ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது.  

விருதுநகரில் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்  மாவட்டத் தலைவர் பூங்கோதை தலைமை வகித்தார்.

இதில் கலந்து கொண்டவர்கள், விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை அரசு உருவாக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் குறைக்க கூடாது என்றும், சட்டப்பூர்வ கூலியை ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

–கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.