நடிகை ஸ்ரீதேவியின் 60வது பிறந்த நாளையொட்டி அவரின் படத்தை சிறப்பு டூடுள் வடிவமைத்து கூகுள் கௌரவப்படுத்தியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, துணைவன் என்ற புராண கதையில் முருகன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அறிமுகமானார். திருமாங்கல்யம் படத்தில் இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் நடித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து சென்று பாலிவுட்டை கலக்கிய மயிலு, லட்சணமான முகம், திறமையான நடிகை என்ற பெயர், 16 வயதினிலே படத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.
இந்நிலையில், மறைந்த சினிமா நடிகை ஸ்ரீதேவி நடிகை ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாளையொட்டி அவருடைய ஃபோட்டோவை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி 1963- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் பிறந்தார்.
சிறுவயது முதலே நடிப்பின்மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி, 4 வயதில் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமான அறிமுகம் ஆனார். அதன் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.







