விருதுநகர் மாவட்டம் சிவலிங்கபுரம் கிராமத்தில் மழையில் நனைந்தபடி பள்ளி மமாணவ, மாணவிகள் பேருந்திற்காக காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.
ராஜபாளையம் அருகே சிவலிங்கபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பேருந்து மூலமாக பள்ளிக்கு
சென்று வரும் நிலையில், அப்பகுதியில் பேருந்து நிறுத்த கட்டிடம் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் சிவலிங்கபுரம் கண்மாய் கரையில் இருந்த பேருந்து நிறுத்த கட்டிடமும் சில வருடங்களுக்கு முன் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் பேருந்திற்காக மரத்தடியில் காத்திருந்து வீடுகளுக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் திடீரென பெய்த கனமழையால் மாணவ, மாணவிகள் ஒதுங்க இடமின்றி புத்தக பைகளுடன் நனைத்தவாறு காத்திருந்து பேருந்தில் ஏறி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், புதிய பேருந்து நிறுத்தம் கட்டிடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.







