நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மார்க் ஆண்டனி இத்திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 06:30 மணிக்கு வெளியானது.
விஷால் ‘லத்தி’ படத்தைத் தொடர்ந்து விஷால் ‘மார்க் ஆண்டனி’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் AAA படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும்
மார்க் ஆண்டனி திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் Pan Indian திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், படத்தின் டீஸரை, நடிகர் விஜயிடம் காண்பிக்க விரும்பிய மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படக் குழுவினர், அதற்காக அவரிடம் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டுள்ளனர். நடிகர் விஜய்யும் மறுப்பேதும் தெரிவிக்காமல், உடனே வரும்படி அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து நடிகர் விஷால் உட்பட படக்குழுவினர் தளபதி விஜய்யை நேரில் சந்தித்தனர். அப்போது விஜய் அவர்களுக்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள். மேலும் நடிகர் விஷால், விஜய் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் அவரிடம் வழங்கினார்.
பின்னர் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீஸரை நடிகர் விஜய்யிடம் படக்குழு போட்டு காண்பிக்க, அதனை பார்த்து மகிழ்ச்சியடைந்த விஜய், படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார். அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷாலிடம் நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், மார்க் ஆண்டனி இத்திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 06:30 மணிக்கு வெளியானது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.









