‘தி அக்காலி’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி!

 ‘தி அக்காலி’ திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். பிபிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.உகேஷ்வரன் தயாரித்துள்ள படம், ‘அக்காலி’. இதில் ஸ்வயம்சித்தா தாஸ், ஜெயக்குமார், வினோத் கிஷன், நாசர், தலைவாசல் விஜய், வினோதினி,…

 ‘தி அக்காலி’ திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

பிபிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.உகேஷ்வரன் தயாரித்துள்ள படம், ‘அக்காலி’. இதில் ஸ்வயம்சித்தா தாஸ், ஜெயக்குமார், வினோத் கிஷன், நாசர், தலைவாசல் விஜய், வினோதினி, தாரணி ரெட்டி, அர்ஜெய் நடித்துள்ளனர். கிரி மர்பி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு அனிஷ் மோகன் இசையமைத்துள்ளார். முகமது ஆசிப் ஹமீத் எழுதி இயக்கியுள்ளார். முகமது ஆசிப் ஹமீத் இந்தப் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார்.

இதையும் படியுங்கள் : அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே நடைபெற உள்ளது தெரியுமா?

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி, “ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.