29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படியுங்கள்: மாணவர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்!

அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி படியுங்கள் என  மாணவ மாணவிகளை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். 
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற விஜய் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
முன்னதாக  நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:
என் நெஞ்சில் குடியிருக்கும்…. தேர்வில் சாதனை படைத்த நண்பா நண்பிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம்.
அதிக இசை வெளியீட்டு விழாவில் பேசி உள்ளேன். இது போன்ற நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்றுள்ளேன். ஏதோ ஒரு  பொறுப்புணர்ச்சி வந்ததாக தோன்றுகிறது. வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்கிறேன் என்பது போல் உங்களை பார்க்கும் போது என் பள்ளிக்காலம் வந்து போகிறது.
நான் உங்களை போல் bright student இல்லை. Average student தான் நான் ஒரு நடிகன் ஆகவில்லை என்றால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று சொல்லி போர் அடிக்க விரும்பவில்லை, என் கனவு  சினிமா தான்.
இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று தோன்ற காரணம் சமீபத்தில் ஒரு படத்தில் அழகான வசனம் கேட்டேன் ” காடு இருந்தால் பிடுங்கி கொள்வார்கள் , காசு இருந்தால் எடுத்து கொள்வார்கள்… ஆனால் படிப்பு மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது…. அது என்னை மிக பாதித்த வரிகளாக இருந்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டுமல்ல, இது தான் எதார்த்தமும் கூட என்று நடிகர் தனுஷ் படமான அசுரன் பட வசனத்தை கூறினார்.
முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என்னால் முடிந்ததை செய்ய இந்த நிகழ்ச்சி முக்கிய காரணம். இதற்காக உழைத்த ஆசிரியர்கள், மாணவர்களை அழைத்து வந்த மக்கள் இயக்க நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.  அடுத்து இலவசமாக கிடைப்பது அட்வைஸ் தான். படி, படி,  இதை தவிர வேறு என்ன பேசுவது? என்று எனக்கு தெரியவில்லை. அதுவும் இது போன்ற நிகழ்ச்சியில். எனக்கு பிடித்த ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன் பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு friendly discussion ஆக வைத்துக் கொள்ளலாம். போர் அடித்தால் சொல்லிவிடுங்கள். நிறுத்தி விடலாம்.
முழுமையாக கல்வி என்று சொல்கிறோம். பள்ளி கல்லூரி மட்டும் முழுமையான கல்வி இல்லை. ஐன்ஸ்டீன் சொன்னார், பள்ளிக்கு போய் படித்து கற்றுக் கொண்டது மறந்த பின் எஞ்சி இருப்பது தான் கல்வி என்றார். முதலில் புரியவில்லை பின்பு கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது. எனக்கே புரிகிறது என்றால் உங்களுக்கும் புரியும். Maths, econmics , chemistry தாண்டி மனதில் இருப்பது கேரக்டர், சிந்திக்கும் திறன். மதிப்பெண் grades முக்கியம் தான் characters சிந்திக்கும் திறனுக்கும் முக்கியதுவம் இருக்க வேண்டும்.
when wealth is lost nothing is lost, when health is lost something is lost , when character is lost everything is lost. இதை சொல்ல காரணம் இவ்வளவு நாள் பெற்றோர் அறிவுறுத்தல் படி இருந்து இருப்பீர்கள். முதல் முறையாக வெளியூர் செல்ல வாய்ப்பு கிடைக்கும். அப்போது உங்களுக்கு ஒரு சில சுதந்திரம் கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.
சுய கட்டுப்பாடுகளுடன். அதே போல் உங்கள் சுய அடையாளத்தை எப்போதும் விட்டுக் கொடுக்காதீர்கள், உங்கள் வாழ்க்கை உங்களிடம் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அனைத்து சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவுகிறது. பொய்களும் சேர்ந்து தான். நான் அனைவரையும் சொல்லவில்லை. இதனை தெரிந்து கொள்ள பாடப் புத்தகத்தை தாண்டி படிக்க வேண்டும்,  நீ என்ன படிக்கிறாய் எங்களுக்கு சொல்கிறாய் என்று கேட்பது எனக்கு கேட்கிறது. முன்பை விட இப்போது படிக்க ஆரம்பத்து இருக்கிறேன்.  நாம் படிப்பதை விட மற்றொருர் படித்து சொல்வது சுலபம்.
படம் கதை சொல்ல தான் கேட்பேன். இப்போது வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளேன். முடிந்தவரை படியுங்கள் அனைத்து தலைவர்கள் கட்சியும் தெரிந்து கொள்ளுங்கள் அம்பேத்கர், பெரியார் பற்றி படியுங்கள்.காமராஜர் பற்றியும் படியுங்கள் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றதை விட்டு விடுங்கள். இது தான் இன்றைய செய்தி.
முதலில் உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. எந்த சமூக வலைதள பக்கத்தை பின் தொடர்கிறீர்கள் என்று சொல்லுங்கள், உங்களை பற்றி சொல்கிறேன் என்று ஆகிவிட்டது.
இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading