காமெடி நடிகர் வெங்கல்ராவ் மருத்துவமனையில் அனுமதி!

காமெடி நடிகர் வெங்கல்ராவ் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரையுலகினரைத் தொடர்ந்து சோகம் துரத்தி வருகிறது. அடுத்தடுத்து இளம் நடிகைகளும், மாடல்களும் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், சோகத்தில் இருந்து மீள முடியாத…

காமெடி நடிகர் வெங்கல்ராவ் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திரையுலகினரைத் தொடர்ந்து சோகம் துரத்தி வருகிறது. அடுத்தடுத்து இளம் நடிகைகளும், மாடல்களும் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், சோகத்தில் இருந்து மீள முடியாத வகையில், அடுத்தடுத்து மரண செய்திகள் திரையுலகினரைத் துரத்தி வருகிறது. நடிகர் பூ ராம் உடல்நலக் குறைவால் மரணமடைந்த நிலையில், நேற்றிரவு நடிகை மீனாவின் கணவர் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில், பிரபல நடிகர் வெங்கல்ராவ் உடல்நலக் குறைவால், மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வெங்கல்ராவ். நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் துணை நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. அதில், தலையில் இருந்து கையை எடுத்தால் சங்கை கடித்துவிடுவார் என வடிவேலுவும், வெங்கல்ராவும் சேர்ந்து செய்த காமெடி இன்று வரை மக்கள் மனதில் பிரபலம்.

இந்நிலையில், சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ் திடீரென ஐதராபாத்தில் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வெங்கல்ராவ் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.