30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் ரஜினியுடன் கமல், லோகேஷ் சந்திப்பு

நடிகர் ரஜினியுடன் கமல் மற்றும் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளனர். 

மாநகரம், மாஸ்டர், கைதி போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம்-2 உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதனால், இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிப்பார்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

வரும் ஜூன் 3-ம் தேதி விக்ரம் திரைப்படம் உலகம் முழுதும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. எனவே படத்திற்கான புரமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை விமான நிலையத்தின் நுழைவுப்பகுதி மற்றும் கார் நிறுத்தம் பகுதிகளில் உள்ள டிஜிட்டல் விளம்பரங்கள் வைக்கப்பட்டு விக்ரம் படத்தில் கமல்ஹாசன் தோன்றிய வேடங்களின் பட ஸ்டில்கள் திரையிடப்பட்டு படத்தின் புமொஷன் வேலைகள் தீவிரமான நடந்து வருகின்றன.

இந்நிலையில் விக்ரம் படக்குழுவினர் ரஜினிகாந்தை சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் சார் மற்றும் ரஜினி சார் ஆகியோருக்கு நன்றி. என்ன ஒரு நட்பு. எங்களுக்கு உத்வேகமாக இருப்பதற்கு நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading