நடிகர் #Dhanush வழக்கு – நெட்ஃபிளிக்ஸ் மனு தள்ளுபடி!

நடிகை நயன்தாரா திருமண ஆவணப் படம் விவகாரம் தொடர்பாக, நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரளாவில் பிறந்து தமிழ்மொழி வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து நாடு முழுவதும் பிரபலமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி கடந்த நவ.18ம் தேதி ‘நயன்தாரா – Beyond The Fairy Tale’ என்ற தலைப்பில் அவரது திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில், நயன்தாராவின் காதல் வாழ்க்கை, தனிப்பட்ட நிகழ்வுகள், அன்பு நிறைந்த திருமண தருணங்கள் மற்றும் விக்னேஷ் சிவனுடனான அவரது வாழ்க்கையைப் பற்றி விரிவாக காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான இதன் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவுக்கு எதிராக ‘நானும் ரவுடிதான்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

Case filed by #Dhanush | Nayanthara, Vignesh Sivan ordered by High Court to answer!

தொடர்ந்து, நடிகர் தனுசுக்கு எதிரான அறிக்கை ஒன்று நயன்தாரா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது திரையுலம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில் நயன்தாராவுக்கு எதிராக, ‘வொண்டர் பார்ஸ் நிறுவனம்’ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்து. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது.

இதற்கிடையே, நடிகை நயன்தாரா திருமண ஆவணப் படம் விவகாரம் தொடர்பாக, தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி நெட்ஃபிளிக்ஸ் நிவனம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்பதால் வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் நெட்ஃபிளிக்ஸின் மனுவை தள்ளுபடி செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.