‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’ படங்களின் தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் night shift studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளது.
‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ உள்ளிட்ட பல வெற்றிகரமான மற்றும் பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களின் தயாரித்த நிறுவனம் தான் YNOT ஸ்டுடியோஸ்.
YNOT ஸ்டுடியோஸ் உறிமையாளரான எஸ். சஷிகாந்த் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமை மிகுந்தவர் என திரைத்துரையில் கருதப்படுகிறார்.
இவர், தனது 23வது தயாரிப்பான ‘டெஸ்ட்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்நிலையில், night shift studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை y not studios நிறுவனம் தொடங்கியது. இதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த night shift studios தயாரிப்பு நிறுவனம் முழுக்க முழுக்க horror படங்களை மட்டுமே எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தொடக்க விழாவுடன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது night shift studios தயாரிப்பு நிறுவனம். முதற்கட்டமாக இந்நிறுவனம் பிரம்ம யுகம் என்ற படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் மம்முட்டி நடிக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.







