ஜனவரி 18 அதிகாலையில் சுபாரு-அசாஹி ஸ்டார் கேமராவால் வானத்தில் ஒரு மர்மமான சுழல் காணப்பட்டது.
ஹவாயில் உள்ள மௌனா கீ வான்காணகத்தில் அமைந்துள்ள கண்காணிப்பகத்தால் இயக்கப்படும் கேமராவால் சுழல் படம் பிடிக்கப்பட்டது. டைம்லேப்ஸ் வீடியோவில் இச்சுழல் படம் பிடிக்கப்பட்டது. முதலில் சிரிதாக தோன்றிய புள்ளி விரைவிலேயே ஒரு வில் போன்ற அமைப்பாக மாறி வானத்தில் ஒரு சுழலாக வளர்ந்ததை கேமரா படம்பிடித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
SpaceX ஏவுதலின் விளைவாக, அதே நாளில் யு.எஸ். ஸ்பேஸ் ஃபோர்ஸிற்காக (U.S. Space Force) ஒரு குளோபல் பொசிஷனிங் சாட்டிலைட்டை (ஜிபிஎஸ்) விண்வெளிக்கு அனுப்பியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஹவாயில் இருந்து சுபாரு தொலைநோக்கி மூலம் சுழல் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
“சுபாரு-அசாஹி ஸ்டார் கேமரா ஹவாய், மௌனகேயா மீது மர்மமான பறக்கும் சுழலைப் படம்பிடித்தது. இந்தச் சுழல் SpaceX நிறுவனம் புதிய செயற்கைக்கோளை ஏவியதுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது” என்று சுபாரு கண்காணிப்பகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
MYSTERIOUS SPIRAL OVER HAWAII: Early Sunday morning, a spiral bloomed out of an unsuspecting dot over Hawaii.
Read what experts think it was: https://t.co/9lRBqfnwfv pic.twitter.com/lU3a9FnvG0
— FOX Weather (@foxweather) January 27, 2023
ஃபால்கன் 9 ராக்கெட்டுகள் விண்வெளியில் பயணிக்கும் போது தேவையற்ற எரிபொருளை வெளியேற்றுகிறது. இதனால் அந்த சுழல் வடிவம் தோன்றியிருக்கும். “முந்தையஃபால்கன் 9 ஏவப்பட்ட பிறகும் இதேபோன்ற சுருள்கள் காணப்பட்டன” என்று Spaceweather.com அறிக்கை கூறியது.
SpaceX ஒவ்வொரு வாரமும் குறைந்த ஒரு ஏவுதலைப் புவி சுற்றுப்பாதையில் நடத்தி வருகிறது. எலோன் மஸ்க் தலைமையிலான நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் பால்கன்-9 மற்றும் பால்கன்-ஹெவி ராக்கெட்டுகளின் 61 ஏவுதல்களை நடத்தியிருக்கிறது.