வருமான வரித்துறை அதிகாரி என கூறி 64 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வருமான வரித்துறை அதிகாரி என கூறி 64 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே அமைக்கப்பட்ட பட்டாசு கடையில், கூகுள் பே மூலம் பணம் அனுப்புவதாக கூறி பட்டாசுகளை வாங்கி திருடிச் சென்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.




