வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக தக்காளி விலை கடும் உயர்வை சந்தித்தது. 1 கிலோ தக்காளி விலை ரூ.200 வரை விற்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே அதன் விலையும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களும் கிராம் கணக்கில் வாங்கிய தக்காளியை கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி கிலோ ரூ. 25-க்கும், இரண்டாம் தரம் தக்காளி ரூ.10-க்கும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நவீன் தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.