அசாமில் வீடு வழங்க கோரிக்கை விடுத்த மாற்று திறனாளி நபரை தோளில் தூக்கி முதலமைச்சர் உறுதி கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அப்பகுதி மக்களை சந்தித்து உரையாடினார். அப்போது உயரம் குறைந்த மஜிபூர் ரகுமான் என்ற மாற்றுத்திறனாளி, தனக்கு வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் அளித்தார்.
அவருக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் உடனடியாக வீடு கட்டித்தரப்படும் என உறுதி கூறிய முதலமைச்சர், மஜிபூர் ரகுமானை தன்னுடைய தோளில் தூக்கி கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.







