முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

சனி, ஞாயிறுகளில் மட்டுமே டிவி பார்த்த 90s கிட்ஸ்


ஜெயஷீபா காளிதாசன்

கட்டுரையாளர்

உலக தொலைக்காட்சி தினம் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1996ம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைக்காட்சி கருத்தரங்கில் ஐ.நா. சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இந்த உலக தொலைக்காட்சி தினத்தில் மனிதனின் வாழ்க்கையில் தொலைக்காட்சியின் பங்கு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் எந்த மூலையில் என்ன சம்பவங்கள் நடைபெற்றாலும் நம் கண் முன்னே கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றுவது தொலைக்காட்சியின் பங்கு அளப்பரியது. பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவராலும் தொலைக்காட்சியில் வரும் செய்திகள் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள முடியும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1920ம் ஆண்டு ஜான் லோகி பெயர்ட் ( John Logie Baird ) என்பவர் தொலைக்காட்சியை கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சி பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொலைக்காட்சி வந்த நாளிலிருந்து தற்போது வரை மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த சாதனமாக தொலைக்காட்சி விளங்குகிறது.

குறிப்பாக 90s கிட்ஸ் வாழ்க்கையில் தொலைக்காட்சி முக்கிய பங்காற்றியது. 90s காலங்களில் தொலைக்காட்சி என்பது அனைத்து வீடுகளிலும் இருக்காது. ஒரு கிராமத்தில் 10 பேரின் வீட்டில் இருப்பது அபூர்வமாக இருந்தது. அன்றைய காலத்தில் 90s குழந்தைகளின் வார இறுதி நாட்களில் வெறும் தொலைக்காட்சி நிகழ்வுகளை பார்க்க கிராமத்தில் டிவி இருக்கும் வீடுகளில் தான் அனைவரும் ஒன்று கூடுவர்.

கேபிள் வசதி அவ்வளவாக இல்லாத காலம் அது. எனவே டிவி இருக்கும் வீடுகளில் பெரும்பாலும் தூர்தஷன் சேனல் தான் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் தான் டிவி பார்க்க முடியும். அதிலும் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் ஒளியும், ஒலியும், சனிக்கிழமைகளில் ஜூனியர் ஜி, ஞாயிற்றுக்கிழமை காலை இராமாயணம், மதியம் சக்திமான் சீரியல், மாலை 4 மணிக்கு சாப்பிட வாங்க நிகழ்ச்சி, அதைத்தொடர்ந்து ஒளிப்பரப்பாகும் திரைப்படம் என இவற்றை காண ஒரு கூட்டமே காத்திருக்கும். இது 90s கிட்ஸ்களின் அழகான வசந்த காலமாகவே உள்ளது.

பின்னர், சன்டிவி சீரியல்களான மெட்டி ஒலி, சித்தி, கோலங்கள், பொதிகை டிவியில் ஒளிப்பரப்பாகும் அஞ்சு-மஞ்சு, வாழ்க்கை, எத்தனை மனிதர்கள் போன்ற சீரியல்கள் இல்லதரசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. உலக நடப்புகளை தெரிந்து கொள்ள இரவு 8 மணிக்கு செய்திகள் ஒளிபரப்பாகும்.

ஆரம்ப கால கட்டத்தில் தகவல் தொடர்பு சாதனம் போல இருந்த தொலைக்காட்சி 90s kids காலங்களில் அறிமுகமான சன்டிவி, ராஜ்டிவி, ஜெயா டிவி போன்ற டிவி சேனல்களின் மூலம் பொழுதுபோக்கு சாதனமாக மாறியது. குறிப்பாக வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளின் பொழுதுப்போக்கில் முக்கிய அங்கமாக மாறியது. திரைப்படங்கள், சீரியல்கள் போன்றவற்றை இல்லத்தரசிகளின் விருப்பமான நிகழ்ச்சிகளாக மாறியது.

1980 கால கட்டங்களில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியின் ஆதிக்கம் தான் அதிகமாக காணப்பட்டது. அதன் பிறகு 1990 காலகட்டங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கலர் டிவிகள் வந்தன. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து கிராமங்களிலும் கலர் டிவிகளை கொண்டு சேர்ந்த பெருமை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை சாரும். பாமர மக்களின் வீடுகளிலும் தொலைக்காட்சி என்பது அவரது காலத்தில் சாத்தியமானது.

இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொலைக்காட்சியில் பல்வேறு வகைகள் வந்துவிட்டன. முன்பு டிவியை மேசையில் வைத்து பார்ப்பது தான் வழக்கம். ஆனால் தற்போது வரும் டிவிகள் அனைத்தும் சுவரில் மாட்டுவது போன்ற அமைப்புடையதாக வந்துவிட்டன. எல்சிடி, எல்இடி, ஸ்மார்ட் டிவி என பல வகைகளில் வந்து விட்டன. அன்றைய காலங்களில் வீட்டிற்கு ஒரு இருப்பது அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது வீடுகளில் 2 டிவி என்பது மிக சாதாரணமாக மாறிவிட்டது.

90s கிட்ஸ்களின் வாழ்க்கையில் தொலைக்காட்சி என்பது அவர்களின் வாழ்க்கையில் ஒன்றிணைந்த அங்கமாக திகழ்ந்தது. ஆனால் இன்றைய 2k கிட்ஸ்களின் வாழ்க்கையில் தொலைக்காட்சி என்பது அப்படியில்லை. அவர்கள் பெரும்பாலான பொழுதை கைப்பேசிகளில் உள்ள விளையாட்டுகளிலேயே கழிக்கின்றனர். டிவி ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும் அனைவரது கைகளிலும் உள்ள கைப்பேசிகளில் தான் கண்களை முகாமிட்டு நிற்கின்றன.

_ ஜெயஷீபா காளிதசன், நியூஸ் 7 தமிழ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முல்லை பெரியாறு அணை விவகாரம்; கேரளா அரசியல் செய்ய வேண்டாம்

G SaravanaKumar

“துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்”: டிடிவி தினகரன்

Halley Karthik

8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் திரைக்கு வரும் தல, தளபதி படங்கள்!

EZHILARASAN D