#NationalFilmAward – தமிழ் சினிமா வென்ற விருதுகள்!

70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் சினிமா வென்ற விருதுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்தியாவில்…

#70thNationalFilmAward - List of Awards Won by Tamil Cinema!

70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் சினிமா வென்ற விருதுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.

தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

மத்திய‌ அரசு ஒவ்வொரு ஆண்டும்  சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், நடன இயக்குநர் என பல்வேறு  பிரிவுகளில் கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த முறை 2022ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.


தேசிய விருதுகள் – தமிழ் சினிமா
  • சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
  • சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
  • சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
  • சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)
  • சிறந்த ஒளிப்பதிவு –  ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
  • சிறந்த ஒலி வடிவமைப்பு – ஆனந்த் கிருஷ்ண்மூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.