முக்கியச் செய்திகள் உலகம்

48 மாடி கட்டடத்தில் ஏறிய 60 வயது “பிரான்ஸ் ஸ்பைடர்மேன்”!

‘பிரான்ஸ் ஸ்பைடர்மேன்’ என்று அழைக்கப்படும் அலன் ராபர்ட் தனது 60வது பிறந்தநாளை 187 மீட்டர் பாரிஸ் வானளாவிய கட்டடத்தில் ஏறி கொண்டாடினார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 60 வயது நபர் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் 48 மாடி கட்டடத்தில் 60 நிமிடத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

அலன் ராபர்ட் என்பவர் 1970 ஆண்டுகளில் இருந்து பல்வேறு கட்டடங்களில் ஏறி மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். இதனால் அவர் ‘பிரான்ஸ் ஸ்பைடர்மேன்’ என்று அழைக்கப்படுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தனது 60வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய அவர், பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் 613 அடி (187 மீட்டர்) உயர வணிக வளாக கட்டடத்தில் எந்தவித உபகரணங்களும் இல்லாமல், ஒரு சிவப்பு ஜம்ப்சூட், காலணிகளுடன் தனது கைகளை மட்டுமே பயன்படுத்தி ஏறினார். உச்சியை அடைந்ததும் கைகளை உயர்த்தி இலக்கை அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “60 வயதாகிவிட்டது என்பது எந்த வகையிலும் தடையல்ல. வயது தடையின்றி விளையாட்டில் சுறுசுறுப்பாக இருந்து பல வெற்றிகளை குவிக்க வேண்டும். 60 வயதானதும் நான் ஏறிய கட்டத்திலேயே ஏற வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்குள்ளேயே உறுதி அளித்திருந்தேன். அது தற்போது நிறைவேறியது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

சாதிப்பதில் ஆர்வம் இருந்தால் போதும், வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அலன் ராபர்ட் செய்த சாதனை இளைஞர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

-உமா பார்கவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒரே நாளில் 3.17 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை

G SaravanaKumar

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு

EZHILARASAN D

முதல்முறையாக எப்போது அதிமுக தலைமையகம் சீல் வைக்கப்பட்டது ?

Web Editor