பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டான அயலான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் வெவ்வேறு ஓடிடி தளங்களில் இன்று வெளியாகின.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கத்தில் பொங்கலையொட்டி அயலான் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஏலியன் ஜேனரில் வெளிவந்த முதல் இந்திய படம் என்று விளம்பரம் செய்யப்பட்ட அயலான், குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. இந்த திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பரத், ஜனனி, சோனாக்சி சிங், பாண்டிய ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படிக்கு காதல் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.தர்ஷன் நடிப்பில் கன்னடத்தில் வெளியான காட்டேரா என்ற திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 1970 களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.










