அரசுப் பணிகளில் பெண்களுக்கு 35 % இடஒதுக்கீடு வழங்கப்படும் -மத்தியப்பிரதேச அரசு அதிரடி!

மத்திய பிரதேச அரசு, மாநிலத்தில் 35 சதவீத அரசு பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின்…

மத்திய பிரதேச அரசு, மாநிலத்தில் 35 சதவீத அரசு பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் பதவி காலம் சில மாதங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் 1997-ம் ஆண்டு மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் சட்டத்தில் இருக்கும் மகளிர் நியமனத்திற்கான சிறப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு மகளிருக்கு வனத்துறை தவிர்த்து அனைத்து அரசுத் துறைகளிலும் 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளது. மாநிலத்தில் பாஜக அரசு பெண்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கிய இடம் அளித்து வருகிறது. இரண்டு கட்சிகளும் பெண்களைப் பற்றிக் குரல் கொடுப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

புள்ளிவிவரங்களைப் பார்த்தால், மாநிலத்தில் மொத்தம் 2.6 கோடிக்கும் அதிகமான பெண் வாக்காளர்கள் இருப்பதைக் காண்கிறோம். மேலும் இந்த வாக்கு வங்கியைக் கைப்பற்ற இரு கட்சிகளும் கடுமையாக முயற்சி செய்கின்றன. அந்த வகையில், மத்திய பிரதேச அரசு, மாநிலத்தில் 35 சதவீத அரசு பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.