முக்கியச் செய்திகள் இந்தியா

35 புதிய பயிர் வகைகளை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கபட்ட 35 வகையான பயிர் விதைகளை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட பயிர் விதைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.  35 வகையான பயிர் விதைகளை நாட்டுக்காக அர்ப்பணித்தார். பின்னர் தேசிய உயிரியல் அழுத்த மேலான்மை நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட வளாகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இதையடுத்து, தேசிய வேளாண் பல்கலைக்கழகங்களுக்கான பசுமை வளாக விருதுகளை வழங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றத்தால் புதிய நோய்கள் தோன்றுவதாகவும், இது மனிதர்கள், கால்நடைகள் மற்றும் பயிர்களையும் பாதிப்பதாக தெரிவித்தார். அறிவியல், அரசு மற்றும் சமூகம் இணைந்து செயல்படும் போது, இந்த தேசம் இன்னும் வலுப்பெற்று, சிறந்த முடிவுகளை பெற முடியும் என்றும் பிரதமர் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

சீனாவில் நிலநடுக்கம்: 3 பேர் உயிரிழப்பு!

Hamsa

“தேர்தலுக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியம் காட்டவில்லை”

Gayathri Venkatesan

கொரோனாவை முழுமையாக தடுக்க, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஜெ. ராதாகிருஷ்ணன்

Gayathri Venkatesan