இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ள நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரும், சுப்மன் கில்லும் அரை சதத்தை கடந்து அடித்து ஆடி வருகின்றனர்.
பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார். ஆஸி அணியிலும் பல மாற்றங்கள் செய்துள்ளார்கள். ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், மேத்திவ் ஷார்ட், லபுஷேன், ஜோஸ் இங்கிலிஸ், கிரீன், ஆடம் ஜாம்பா, அலெக்ஸ் கைரி, சீன் அப்பாட், ஹேசல்வுட், ஸ்பென்சர் ஜான்சன்.
இந்திய அணியை பொறுத்தவரை கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ், ஸ்ரேயாஷ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் களம் இறங்குகின்றனர்.
இந்நிலையில் டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இந்திய அணி தரப்பில் ஓப்பன் பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். இதில் ருதுராஜ் 12 பந்துகளை சந்தித்து 8 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து சுப்மன் கில்லும் ஷ்ரேயாஷ் ஐயரும் பாட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினர். இந்நிலையில் 17 ஓவர்கள் முடிவில் 4 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் அரை சதத்தை கடந்து 62 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் அரை சதத்தை கடந்தார். இதில் ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். இவர் 43 பந்துகளை சந்தித்து 54 ரன்கள் சேர்த்திருந்தார். இந்நிலையில் இருவரும் அடித்து விளையாடி வருகின்றனர்.
முதல் போட்டியில் இந்தியா வென்று 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முன்னிலை வகிக்கிறது.







