சுமார் 2 மணி நேரம் மலை ஏறி பாபா குகையில் தியானம்: வைரலாகும் ரஜினிகாந்த் புகைப்படங்கள்!

ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மகாவதார் பாபாஜி குகைக்கு செல்வதற்காக சுமார் இரண்டு மணி நேரம் மலையேறி சென்று குகையில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார்…

ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மகாவதார் பாபாஜி குகைக்கு செல்வதற்காக சுமார் இரண்டு மணி நேரம் மலையேறி சென்று குகையில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வியாழக்கிழமை வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுப்பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி மடம் வியாசர் குகை, சரஸ்வதி நதி மறையும் இடத்திற்கு ரஜினி சென்ற புகைப்படம் ஏற்கனவே வெளியாகின.

இந்நிலையில் இன்று மீண்டும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மகாவதார் பாபாஜி குகைக்கு செல்வதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சுமார் இரண்டு மணி நேரம் ரஜினிகாந்த மலையேறிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் பாபா குகையில் தியானம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கடந்த 48 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் ரஜினிகாந்த் நடித்த அபூர்வ ராகம் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.